கோடை காலத்தின் உக்கிரத்தில் தகித்தான் சூரியன். உக்கிரத்தை தாங்க இயலாத தளிர்கள் தங்கள் சிரத்தை கவிழ்த்து தரை பார்த்து இருந்தன. சுற்றுபுறத்தை அளவிடுகையில் அது ஒரு சிறு கிராமம் என்று தெரிகிறது. கிராமத்தின் கம்பீரத்தை உயர்த்திக்காட்டுவது போல அந்த கிராமத்தின் பசுமை கோடையிலும் கண்களை குளிர்விக்கிறது.
அதோ ஒரு பெண்மணி மற்றும் ஒரு சிறுவன் அந்த வண்டியில் ஏறுகிறார்கள். அந்த பெண்ணை பார்த்தால் கற்பமாய் இருப்பது போல இருக்கிறது. சிறுவனுடன் வண்டியில் போவதை பார்த்தால் அவளுடைய தைரியம் நமக்கு மெய்சிலிர்ப்பை உண்டாக்குகிறது.
அந்த தாயின் கண்களில் தெரியும் வலி அவளுக்கு குழந்தை பிறக்கும் நேரம் நெருங்குவதை பறைசாற்றுகிறது. அந்த பெண் நேராக சென்று மருத்துவ மனையில் சேருகிறாள். மதியம் இரண்டு மணி ஆகி விட்டிருந்தது. செவிலியர் அவசர நடை அந்த பெண் கருத்தரிக்கும் நேரம் நெருங்கி விட்டதை நமக்கு தெரிவிக்கிறது.
ஒன்றும் அறியாத அந்த பாலகன் தன் தாய்க்கு ஒரு சேவகன் வெளியே காவல் நிற்கிறான். சிறுவனின் கம்பிரமான நடை அவன் எதற்கும் அஞ்சாதவன் என்று காட்டுகிறது. மருத்துவ அறையில் இருந்து ஒரு அழுகை குரல் வெளியே வருகிறது. அந்த சிறுவனின் தாய் ஒரு ஆண் மகவை ஈன்று எடுகிறாள். அந்த குழந்தையின் முதல் அழுகை திக்கெட்டும் ஒலிக்கிறது.

No comments:
Post a Comment